மேலும் செய்திகள்
நள்ளிரவில் கொட்டிய மழை
12-Aug-2025
செஞ்சி: செஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி துவங்கி இரவு 1:00 மணி வரை பலத்த இடி மின்னலுடன் கன மழை பெய்தது. நேற்று காலை வரை 104 மி.மீ., மழை பதிவாகியது. மழையில் கோணை கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டி இருந்த எட்டையன் என்பவரின் பசுமாடு மற்றும் கன்று குட்டி மின்னல் தாக்கி இறந்தன. ஒதியத்துார் கிராமத்தில் கணேசன் என்பவரின் மாட்டு கொட்டகை, மாதப்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவரின் ஓட்டு வீடு சேதமானது.
12-Aug-2025