மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
24-Mar-2025
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்து 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது.தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர்.
24-Mar-2025