மேலும் செய்திகள்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
06-Nov-2026
விழுப்புரம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் மா.கம்யூ., கட்சி மாவட்டக்குழு சார்பில் ஓட்டுரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி உறுதிமொழியை துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உறுதிமொழி வாசித்தார். மாநில குழு உறுப்பினர் கீதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், முத்துகுமரன் முன்னிலை வகித்தனர். இதில், ஓட்டுரிமை பாதுகாப்பு குறித்து கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்திரன், அறிவழகன், முருகன், ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Nov-2026