உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர் பேரவை பொதுக்குழுக் கூட்டம்

ஆசிரியர் பேரவை பொதுக்குழுக் கூட்டம்

குறிஞ்சிப்பாடி:கடலூர் மாவட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் வடலூரில் நடந்தது.கூட்டத்தில் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் தலைமை ஆசிரியர் தங்கராசு தலைமையில் நடந்தது.பண்ருட்டி தெய்வசிகாமணி மாவட்டத் தலைவராகவும், முருகன் செயலராகவும், சுவாமிநாதன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மாவட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் எம்.எல்.ஏ., க்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது. கல்வி அமைச்சர், மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரில் சந்திப்பது. தமிழக அரசின் செயல்பாட்டிற்கும், கல்வித்துறை பணிக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது. அனைத்து வட்டாரத்திலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை