உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடலூர்:கடலூர் கிருஷ்ணசாமி நினைவு தொழில் நுட்பக் கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ரூபாவதி, நடுவீரபட்டு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா ஆகியோர் தொழு நோய் பற்றிய அறிகுறிகள் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரம்ப நிலையில் கண்டறியும் முறை குறித்து பேசினர்.நாகராஜன் மேற்பார்வையாளர்கள் பச்சையப்பன், சந்திரசேகரன், ராமலிங்கம் சுகாதார செவிலியர் அஞ்சலிதேவி, பார்த்திபன் பெருமாள் அந்தோணிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் வாசுதேவன் என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் முத்துக்குமரன் சிவசங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை