உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலி ஆவணம் தயாரித்து வீடு அபகரிப்புகோர்ட் உத்தரவால் 5 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து வீடு அபகரிப்புகோர்ட் உத்தரவால் 5 பேர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் முறைகேடாக போலி ஆவணம் தயார் செய்து வீட்டை அபகரிப்பு செய்த 5 பேர் மீது கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.பரங்கிப்பேட்டை வரதராஜபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சலீம். வெளிநாட்டில் உள்ளார்.இவரது மாடிவீட்டை அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், முகமது ரிஜாம், பாரூக், ஆனந்தன், ஜெயராமன் ஆகியோர் கடந்த 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி போலி ஆவணம் தயார் செய்து வீட்டை அபகரிப்பு செய்து விட்டதாக சலீம் சகோதரர் ஹாஜா மொய்தீன், பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.அதனைத் தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிப்பு செய்த அப்துல் ரஹீம், முகமது ரிஜாம், பாருக், ஆனந்தன், ஜெயராமன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை