உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., கிளைக் கூட்டம்

மா.கம்யூ., கிளைக் கூட்டம்

கடலூர்:மா.கம்யூ., கிளைக் கூட்டம் கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் நடந்தது.வேல்முருகன், சுகுமாறன் தலைமை தாங்கினர். கூட்டத்தை ஒன்றிய செயலர் மாதவன் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் தட்சணாமூர்த்தி, குமார், கிளைச் செயலர் பழனிவேல், ராஜேஷ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கே.என். பேட்டை புதுநகர் சாலை மற்றும் பெண்கள் கழிவறையை சீரமைக்க வேண்டும். மின் விளக்கு இல்லாத தெருக்களில் மின் விளக்கு அமைக்க வேண்டும். சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ