உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில், சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, இணையவழி மோசடி சம்பந்தமான குற்றங்கள், சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து எப்படி தங்களை தற்காத்து கொள்ளுதல், சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது பற்றி கூறினார்.சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் இணையதளம் www.cybercrime.gov.in, இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி