உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

அரசு கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதையொட்டி, நேற்று மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, இணையவழி மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், மாணவர்கள் விழிப்போடு இருப்பது மட்டுமின்றி, பெற்றோர், உறவினர்களுக்கும் இதை பற்றி தெரியப்படுத்த வேண்டும் என பேசினார். இதையடுத்து, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் தவமணி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு கல்வி சம்பந்தமான அறிவுரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், போலீஸ்காரர்கள் கலைவாணன், சுதன், ஆங்கில துறை தலைவர் ஸ்ரீதேவி, கணினி துறை தலைவர் பாரதி, உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி