மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பைக் பேரணி
01-May-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கஞ்சனுாரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கஞ்சனுார் போலீஸ் சரகம் அனந்தபுரம் கூட்ரோடு தனியார் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., இளமுருகன் தலைமை தாங்கி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, குழந்தை திருமணம் தடுப்பு முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சைபர் கிரைம் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர், குழந்தைகள் உதவி பிரிவுக்கு 1098, பெண்கள் உதவி பிரிவு181, சைபர் குற்றம் புகாருக்கு 1930 எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுரை வழங்கினர். கூட்டத்தில் கஞ்சனுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
01-May-2025