மேலும் செய்திகள்
ஏ.அகரம் ஊராட்சியில் ரூ. 8 லட்சத்தில் கலையரங்கம்
29-Sep-2024
மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குரூர் கிராமத்தில் புதிய கலையரங்க கட்டடம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த எதிர்கட்சி பிரமுகர் கலையரங்க கட்டுமான பணியை செய்தார். சில தினங்களுக்கு முன் கட்டுமான பணி முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாரானது. இந்நிலையில் கலையரங்க பணி முறையாக நடைபெறவில்லை என கிராம மக்கள் ஒன்றிய பொறியாளரிடம் புகார் தெரிவித்தனர். அதனை அவர் பொருட் படுத்தவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை புதிதாக கட்டிய கலையரங்கின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடுத்தடுத்து விழுந்தது. அதனை அறிந்த ஒப்பந்ததாரர், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததை சரி செய்ய ஊழியர்களை அழைத்து வந்தார்.அதனை அறிந்த கிராம மக்கள், மாவட்ட பொறியாளர் கட்டடத்தை ஆய்வு செய்தபின் மேற்கூரையின் சிமெண்டு காரைகளை சரி செய்ய வேண்டும் என கூறி சீரமைப்பு பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
29-Sep-2024