மகள் மாயம் தாய் புகார்
செஞ்சி: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாரன் மகள் தீபா, 21; இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நின்று விட்டார். கடந்த 19ம் தேதி காலை 5:30 மணிக்கு வேலை செய்த நிறுவனத்தில் பிடித்தம் செய்திருந்த பணத்தை வாங்கி வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.இதுகுறித்து அவரது தாய் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.