மருத்துவக்கல்லுாரி டீன் பொறுப்பேற்பு
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் புதிய டீன் பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் டீனாக பணிபுரிந்த ரமாதேவி கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார்.இதையடுத்து கல்லுாரி (பொறுப்பு)டீனாக கீதாஞ்சலி பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், கல்லுாரியில் புதிய டீனாகலுாசி நிர்மல் மடோனா நியமிக்கப்ப ட்டு நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.