மேலும் செய்திகள்
வருவாய் துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
30-Oct-2024
விழுப்புரம்; விழுப்புரம் புதிய பஸ் நிலைய நகராட்சி திடலில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அவலூர்பேட்டை அருகே கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது, அவலூர்பேட்டை போலீசில் புகார் செய்தும் வழக்குப்பதிவு செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் செல்வக்குமார், டேவிட்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
30-Oct-2024