உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

செஞ்சி: கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செஞ்சி அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தில் நீண்ட நாட்களாக ஒரு பிரிவினர் அம்மச்சாரம்மன், முனீஸ்வரன் கற்சிலைகள் வைத்து வழிபட்ட நிலையில் கோவில்கள் கட்டி உள்ளனர். இந்த கோவில்கள் நீர்நிலை புறம்போக்கில் இருப்பதால் அகற்ற வேண்டும் என தனி நபர் ஒருவர் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் கோவில்களை இடிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கோவிலை இடிக்க வருவாய்துறையினர் கோவில் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் செஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாரதி தலைமைதாங்கினார். அமைப்பு குழு தலைவர் முத்து கண்டன உரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ