மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
16-Sep-2025
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரில், வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு, வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் பாண்டியன், சண்முகம், ரஸ்கின் ஜோசப், லுசியா, பிரின்ஸ் சோமு, ரஞ்சித், சங்கர், நாராயணன், ராகவேந்திரன், நாராயணசாமி, சரவணன், பாக்கியராஜ், பிரித்வி ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர் .
16-Sep-2025