| ADDED : டிச 27, 2025 06:01 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 17.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டியுள்ள கணினி வகுப்பறை. ராதாபுரம் வட்டார அரசு சுகாதார மருத்துவமனையில் 15வது பொது நிதியின் கீழ் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார மைய கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், ஒன்றிய பொறியாளர் நடராஜன், முருகன் உடனிருந்தனர்.