உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சி திட்டப்பணி: கலந்தாய்வு கூட்டம்

வளர்ச்சி திட்டப்பணி: கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தமிழக அரசு வளமிகு வட்டார வளர்ச்சியினை உருவாக்கிடும் வகையில், 50 பின் தங்கிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து 2025-2026ம் ஆண்டிற்கான வளர்ச்சிதிட்டங்கள் இறுதி செய்யப்பட்டது என தெரிவித்தார்.கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மாவட்ட திட்டக்குழு அலுவலர் நடராஜன், புள்ளியியல் அலுவலர் முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோதினி உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ