உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் எம்.எல்.ஏ., ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார் .விக்கிரவாண்டி ஒன்றியம் ஆசூர் கிராமத்தில் 15 வது மான்ய நிதியிலிருந்து 39.68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் துணை சுகாதார நிலையம் ,எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதி 9.77 லட்சம் மதிப்பில் காலனி பகுதியில் கட்டப்படும் புதிய நியாய விலை கட்டடத்தை புகழேந்தி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம் ,ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை ,பி.டி.ஓ.,க்கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரவிதுரை,ஜெயபால்,ஒன்றிய கவுன்சிலர்கள் இளங்கோ,செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி