மேலும் செய்திகள்
நாளை மின்தடை
8 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
8 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
8 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
8 hour(s) ago
விழுப்புரம் : கோலியனுார், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.கோலியனுார் ஒன்றியம், அத்தியூர் திருவாதி ஊராட்சியில், கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் கணக்கீடு பணியை, ஆய்வு செய்தார்.தொடர்ந்து, வேலியம்பாக்கம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 30.1 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் புதிய ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகளை, பார்வையிட்டார். கண்டமானடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் குடியிருப்பு திட்டத்தின் கீழ், தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருளர்களுக்கான 10 வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.கண்டமங்கலம் ஒன்றியம், கெங்கராம்பாளையம் நிதியுதவி தொடக்க பள்ளியில், இந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகளை பார்வையிட்டார். பள்ளிபுதுப்பட்டு ஊராட்சியில் இருளர்களுக்கான வீடு கட்டும் பணி, ரேஷன் கடை புனரமைத்தல் பணிகளை ஆய்வு செய்தார்.ரெங்கரெட்டிபாளையம் முதல் நெட்டப்பாக்கம் வரை உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள், ராம்பாக்கம் ஏரிக்கரை சாலை - சொர்ணாவூர் மேல்பாதி வரை 1,350 மீட்டர் நீளம் சாலை அமைத்தல், பொது நுாலக கட்டடம் கட்டுமான பணிகள், அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago