உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொங்கும் இடிதாங்கி பக்தர்கள் அச்சம்

தொங்கும் இடிதாங்கி பக்தர்கள் அச்சம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புதியதாக கட்டிய ராஜகோபுரத்தின் மேல் அமைத்த இடிதாங்கி கழன்று தொங்கி கொண்டு இருப்பதால், பக்தர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில், 1600 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஒராண்டிற்கு முன்பு, ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரத்தின் உச்சியில் இடி தாக்கத்தை தடுக்கும் வகையில் இடிதாங்கி அமைக்கப்பட்டது. புதிதாக அமைத்த இடிதாங்கி உடைந்து கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்கள் மீது விழுந்து இடிதாங்கி விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். முறிந்து விழும் நிலையில் உள்ள இடிதாங்கியை சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி