உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு கொடுக்காமல் அரசின் இலவச சைக்கிள்கள் வீணாகி போனதா? பள்ளி நிர்வாகம் விளக்கம்

மாணவர்களுக்கு கொடுக்காமல் அரசின் இலவச சைக்கிள்கள் வீணாகி போனதா? பள்ளி நிர்வாகம் விளக்கம்

திண்டிவனம் : திண்டிவனம், வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள், அவர்களுக்கு கொடுக்கப்படாமல், வீணாக மக்கி வருவதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இது குறித்து பள்ளியின் தாளாளர் செல்லதுரை, பொறுப்பு தலைமையாசிரியர் ஜெபா கூறியதாவது: எங்கள் பள்ளி திண்டிவனம் கல்வி மாவட்டத்திலுள்ள 15 பள்ளிகளுக்கு மையமாக உள்ளது. இங்கு கடந்த 2020-21 கல்வியாண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்க ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, பள்ளி வளாகத்தில நிறுத்தி, பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு 300 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு விட்டன. இதேபோல் மற்ற பள்ளிகளுக்கும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதில் பழுதடைந்த சைக்கிள்கள் மட்டும், அந்த சமயத்தில் வகுப்பறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டன. இந்த சைக்கிள்களை ஒப்பந்தம் எடுத்த தனியார் கம்பெனியிடம் எடுத்து செல்லக்கூறியும் எடுத்து செல்வில்லை. அவ்வாறு எடுத்து செல்லாமல் உள்ள சைக்கிள்கள் குறித்து தவறான தகவல் பரவியுள்ளது. இது தொடர்பாக சி.இ.ஓ.,உத்தரவின் பேரில் திண்டிவனம் கல்வி மாவட்ட கண்காணிப்பாளர்கள் கமலக்கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, உண்மை நிலையை தெரிந்து கொண்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை