இறந்தவர் உடலை கொண்டு செல்வதில் சிக்கல்
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த வடம்பூண்டி ஊராட்சி, பெரப்பேரி கிராமத்தில், மயானா பாதையை ஒருவர் கொட்டகை போட்டு பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று, அதே கிராமத்தில் இறந்த கண்ணம்மாள்,55; என்பவரை உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் மயான பாதைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் இறந்தவர் உடலை மாற்று வழியாக மயானத்திற்கு கொண்டு சென்றனர்.