கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடந்தது. பள்ளியில் நடந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். அதில், 16 மாணவியர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்று களாக போட்டி நடந்தது. போட்டிக்கு, பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வாசுகி, பள்ளியின் மேலாளர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். 8ம் வகுப்பு மாணவி ஜெனிஷியா, 9ம் வகுப்பு மாணவி பூஜா ஸ்ரீ முதலிடம் பிடித்தனர். ரோகித்ராஜ், துபிஷ் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட் டது. ஆசிரியர்கள் செல்லம் மாள், மஞ்சுளா, ஆர்த்தி, ஸ்வாதி, சரண்யா, வள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். விழுப்புரம் அதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை யூஜின் நிர்மலா தலைமை தாங்கினார். இதில், ஐந்தாம் வகுப்பு மாணவிகள் லேகஸ்ரீ, ஷர்மிளா முதலிடமும், மாணவர்கள் செந்தாமரைக் கண்ணன், சிவசக்திவேல் இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை பள்ளியின் கல்வியாளர் மற்றும் பா.ம.க., காணை வடக்கு ஒன்றிய செயலாளர் பாலா வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி உயர்நிலைப் பள்ளி விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சாந்தி தலைமை தாங்கினார். பொறுப்பு ஆசிரியர் இளவரசி முன்னிலை வகித்தார். இதில், 9ம் வகுப்பு மாண வர்கள் அஸ்பர்ஆபியா, ஷாய்னா முதலிடம் பிடித் தனர். 8ம் வகுப்பு மாணவர் கள் ரோஷன், பிரவீன்குமார் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் ம ற்றும் கேடயம் வழங்கப் பட்டது. போட்டியில் பங் கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது.