உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

கண்டாச்சிபுரம்: அன்னியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி நடந்தது.புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் சார்பில் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடந்தது. 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். தேர்வான 16 மாணவிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகள் போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஏஞ்சலின் தலைமை தாங்கினார். போட்டியில் தனலட்சுமி, ஷர்மிளா குழு முதலிடமும், கோமதி, ராஜஸ்ரீ இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக இப்பள்ளிக்கு 'தினமலர் - பட்டம் இதழை' வழங்கிய சரஸ்வதி கல்விக் குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன், தாளாளர் முத்து சரவணன் ஆகியோருக்கு பள்ளி சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ