உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

செஞ்சி: செஞ்சி வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து பதில் சொல் பரிசு வெல் வினாடி வினா போட்டி செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கோவிந்தராஜ் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதில் 40 மாணவர்கள் தேர்வெழுதினர். 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து வினாடி வினா போட்டி நடந்தது.2 சுற்றுகளாக நடந்த போட்டிக்கு பள்ளி முதல்வர் லட்சுமணன் தலைமை தாங்கினார். போட்டியில் 8 ம் வகுப்பு மாணவன் கோவேஷ், 7ம் வகுப்பு மாணவன் யஷ்வந்த் முதலிடத்தையும், 8ம் வகுப்புமாணவி தேஜாஸ்ரீ, 7ம் வகுப்பு மாணவி நஸ்மின் ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் பாஸ்கர், செயலாளர் அரங்க திருமாறன் ஆகியோர் கேடயம், பதக்கம் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினர்.

ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி

சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டிக்கு தாளாளர் கவுசல்யா தலைமை தாங்கினார்.இதில் 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 குழுக்காளாக பிரிக்கப்பட்டு 2 சுற்றாக போட்டி நடந்தது. 9ம் வகுப்பு மாணவர்கள் தர்ஷன்குமார், கோவர்த்தனன் முதலி டமும், 9ம் வகுப்பு மாணவர்கள் தர்மா, பாவேந்தன் இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கோவிந்தராஜ் ஆகியோர் கேடயம், பதக்கம் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி