உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகளின் கல்வி நலனில் தினமலர் நாளிதழின் அக்கறை; சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு

குழந்தைகளின் கல்வி நலனில் தினமலர் நாளிதழின் அக்கறை; சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு

'தினமலருக்கு' நன்றி

விழுப்புரம் நகரில். விஜயதசமி நாளில், மாணவர்களுக்கு கல்வி கற்றலை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. குழந்தைகள், முதன் முதலில் பிஞ்சு விரலால் எழுதி நல்ல தொடக்கத்தைத் துவங்கியுள்ளனர். இதனை ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழ் நிறுவனத்திற்கு பாராட்டுகள். என்றும் நினைவில் இருக்கும் வகையில் உடனடியாக போட்டோவுடன் சான்றிதழ் வழங்கியது தனி சிறப்பாகும். -குலோத்துங்கன், சீனியர் ஆடிட்டர்.

'தினமலருக்கு' பாராட்டு

எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, குழந்தைகளின் கல்விதான், எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமாக அமையும். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து, அரிச்சுவடியில் ஆரம்பித்து குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் துவக்கி வைத்த நிகழ்வு மகிழ்ச்சியளிக்கிறது. இதனை சிறப்பாக செய்து செம்மைப் படுத்திய தினமலர் மற்றும் சரஸ்வதி கல்வி நிறுவனத்திற்கு பாராட்டுகள். - பிரேமலதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.

மகிழ்ச்சியாக உணர்கிறேன்

கல்வி கற்பதற்கு தொடங்கும் குழந்தைகளுக்கான, அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்வு வரவேற்க கூடிய நல்ல நிகழ்ச்சி. நமது பாரம்பரியத்தை நினைவு கூறும் வித்யாரம்பம் நிகழ்வை நடத்தும் தினமலர் முயற்சிக்கு பாராட்டுகள். நமது முன்னோர்கள் பின்பற்றிய மரபை நாம் தொடர்வது சிறப்பு. இப்போதுள்ள குழந்தைகள் அறிவாக உள்ளனர். எல்லாவற்றையும் விரைவாக கற்கின்றனர். இன்று குழந்தைகளுக்கு அரிச்சுவடி மூலம் கல்வியை துவக்கி வைப்பது மகிழ்ச்சியாக உணர்கிறேன். -சிவசுப்ரமணியன், டி.இ.ஓ., திண்டிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை