உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி சார்பில், காவேரிப்பாக்கம், நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், தினமலர்-பட்டம் இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வருகின்றது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். கவுன்சிலர் ேஹமமாலினிஜெயராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் சரவணன் ஆகியோர் தினமலர்-பட்டம் இதழை வழங்கினர். இதில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில், பள்ளியின் உதவி தலைமையாசிரியர் சுந்தரராசு, ஆசிரியர்கள் ஸ்ரீவசந்தி, ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை