உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் வித்யாரம்பம்; விழுப்புரத்தில் கோலாகலம்; குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர் வித்யாரம்பம்; விழுப்புரத்தில் கோலாகலம்; குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு

விழுப்புரம்; விழுப்புரத்தில் விஜயதசமியொட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம் இதழ்' மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோடு வ.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடந்த 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி எழுதும் நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் எஸ்.பி., சரவணன், வருமான வரித்துறை சட்ட ஆலோசகரான சீனியர் ஆடிட்டர் குலோத்துங்கன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரேமலதா, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சிவசுப்ரமணியன், அரசு மருத்துவக் கல்லுாரி முதுநிலை உதவி பேராசிரியர் செல்வகுமார், விழுப்புரம் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன், சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன், பொருளாளர் சிதம்பரநாதன், பள்ளி முதல்வர் சுபஸ்ரீ ஆகியோர் வித்யாரம்பம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முன்னதாக, காலை 8:30 மணிக்கு, கோவில் குருக்கள் சீதாராமன், கணேசன் ஆகியோர், வித்யாரம்பம் நிகழ்வுக்கான சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து, சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளின் விரலைப் பிடித்து, தானியங்களில் 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி, குழந்தைகளின் கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து அரிச்சுவடி எழுதிய குழந்தைகளுக்கு, அவர்கள் எழுதிய முதல் எ ழுத்தின் அழகிய நிகழ்வை பு கைப்படம் எடுத்து, விழா அரங்கத்திலேயே புகைப்படத்துடன் கூடிய தினமலரின் சான்றிதழ் பெற்றோ ரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்காக, காலை 8:00 மணிக்கே, விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் நிரஞ்சன், செல்வகுமார் மகன் பிரகன்யா ஆகியோர் குடும்பத் துடன் வந்திருந்தனர். தொடர்ந்து, திரளான பெற் றோர் குடும்பத்துடன் அணி வகுத்து வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், கல்விச்சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளம் தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள்பெறவும், விஜயதசமி திருநாளில் 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்வில் பெற்றோருடன் பங்கேற்று, சரஸ்வதி தேவியை வழிபட்டு, தங்கள் கல்வி பயணத்தை தொடங்கியதை பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தினமலருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், கல்வி சாதனங்கள், எழுது பொருட்கள் அடங்கிய கிப்ட் பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ