உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு விழா

அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சங்கராபும் : தேவபாண்டலம் நகர அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டியன் வரவேற்றார். தலைவராக தெய்வீகனும், செயலாளராக ஸ்ரீராமனும், பொருளாளராக மூர்த்தியும் பொறுப்பேற்றனர். துணை ஆளுநர் மூக்கையாகணேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சேவை திட்டத்தை முன்னாள் மாவட்ட ஆளுநர் தணிகாசலம் தொடங்கி வைத்தார். தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மண்டல தலைவர் தங்கராஜ், மாவட்ட தலைவர்கள் வேலு, வேங்கடசுப்பன், மணி வாசகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை