உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி முதல்வர் ஜெ., துவக்கினார்

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி முதல்வர் ஜெ., துவக்கினார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வகுப்புகள் துவக்க விழா நடந்தது. சென்னையில் நேற்று நடந்த விழாவில் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். இதனை தொடந்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்புகள் துவக்க விழா நடந்தது. திருவள்ளுவர் பல்க லைக் கழக துணை வேந்தர் ஜோதிமுருகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க் கள் குமரகுரு, அழகுவேல்பாபு, திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேகர் வரவேற்றார். தமிழக அரசு கொறடா மோகன் எம்.எல்.ஏ., சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை