உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஞ்சமி நிலங்களை மீட்டு தர கோரிக்கை

பஞ்சமி நிலங்களை மீட்டு தர கோரிக்கை

விழுப்புரம் : பஞ்சமி நிலங்களை மீட்டு தருமாறு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வானூர் அருகே கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பராயன், மஞ்சணி, பாளையம், சீனுவாசன், பெருமாள், ராமச்சந்திரன், ஏழுமலை, சேகர், கணபதி. ஆதிதிராவிடர் இனத்தை இவர்களுக்கு அதே பகுதியில் கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி அரசு சார்பில் தலா 5 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் மானாவரி பயிர் செய்த போது நஷ்டம் ஏற்பட்டதால் சென்னைக்கு சென்று கட்டட கூலி வேலை செய்தனர். இந்நிலையில் சென்னை மாதாவரத்தை சேர்ந்த பக்தவச்சலு என்பவர் தங்களது நிலத்தின் மீது போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள் ளதாகவும், அதனை மீட்டு தருமாறும் நிலத்தை இழந்தவர்கள் நேற்று விழுப்புரம் எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். வழக்கறிஞர்கள் தனபால், தேவராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை