உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை மனு

மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை மனு

விழுப்புரம் : மகன் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி தந்தை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: விழுப்புரம் மகாராஜபுரத்தில் வசித்து வருகிறேன். எனது மகன் பாஸ்கர்,38. இவர் கப்பியாம்புலியூர் சமத்துவபுரம் அருகே உள்ள தனியார் பெர்டிலைசர் உர தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். கடந்த 12ம் தேதி வேலை சுமை அதிகமாக இருப்பதாக கூறி பணிக்கு செல்லாமல் இருந்தார்.இந்நிலையில் நிறுவன உரிமையாளர் முருகேசன், மேலாளர் லட்சுமி நாராயணன் இருவரும் வேலைக்கு வருமாறு பாஸ்கரை மிரட்டியுள்ளனர். இதனால் 13ம் தேதி காலை பணிக்கு சென்ற பாஸ்கர் அன்றிரவு சென்னை-கும்பகோணம் சாலை சமத்துவபுரம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அன்றிரவே சந்தேகத்தின் பேரில் முருகேசன், மேலாளர் லட்சுமி நாராயணன் மீது வளவனூர் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் இந்த புகாரை மாற்றி பாஸ்கர் வாகன விபத்தில் இறந்தது போன்ற போலி புகாரை பதிந்தனர். எனது மகன் பாஸ்கர் கொலைக்கு காரணமான முருகேசன், லட்சுமி நாராயணன் மீது கொலை வழக்கு பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தேன். அதன்பேரில், அந்த வழக்கு சந்தேக மரணம் என்ற பிரிவில் மாற்றி, விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டரை விசா ரணை அதிகாரியாக நியமித்துள் ளனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை