உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் 41 ஆயிரம் பேர் மனு தாக்கல்

மாவட்டத்தில் 41 ஆயிரம் பேர் மனு தாக்கல்

விழுப்புரம் : மாவட்டம் முழுவவ தும் தேர்தலில் போட்டியிட 41 ஆயிரத்து 304 பேர் மனு தாக்கல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 15 பேரூராட்சி தலைவர்கள் உட்பட 10 ஆயிரத்து 223 பதவி களுக்கு தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு 440 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 ஆயி ரத்து 532 பேர், ஊராட்சி தலைவர்களுக்கு 6 ஆயிரத்து 382 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 28 ஆயிரத்து 660 பேர், நகராட்சி தலைவர் பதவிக்கு 56 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் நகராட்சி கவுன் சிலர் பதவிக்கு 715 பேர், பேரூராட்சி சேர்மன் பதவிக்கு 170 பேர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1,349 பேர் மனு தாக்கல் செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 ஆயிரத்து 304 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை