உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க.,- பா.ம.க., செஞ்சியில் ஊர்வலம்

தே.மு.தி.க.,- பா.ம.க., செஞ்சியில் ஊர்வலம்

செஞ்சி : செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தே.மு. தி.க., சார்பில் நகர செயலாளர் பழனி நேற்று மனு தாக்கல் செய்தார். முன்னதாக செஞ்சி கூட்ரோட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்றனர். கவுன்சிலர் பதவிக்கு குருமூர்த்தி, விஷ்ணுபிரியா, கீதா ஆனந்தன், சரவணன், ரவி, ஜெயா உட்பட 18 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் செஞ்சி சிவா பங்கேற்றனர். இதேபோல், பேரூராட்சி தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் மாவட்ட தொண்டரணி தலைவர் கணபதி மனு தாக்கல் செய் தார். வார்டு கவுன்சிலர் பதவிக்கு பெருமாள், காந்திமதிநாதன், வெங்கடேசன், பரமேஸ்வரி, சிவாஜி, சந்திரசேகர் மனு தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் எம். எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ