உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் மாவட்டத்தில் ரூ.75 கோடி பட்டுவாடா

ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் மாவட்டத்தில் ரூ.75 கோடி பட்டுவாடா

விழுப்புரம் மாவட்டத்தில், அரசு நேரடி கொள்முதல் மூலம், 43 ஆயிரத்து 497 மெட்ரிக் டன் நெல் விற்பனை நடைபெற்றுள்ளது. விவசாயிகளுக்கு 75 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரத்து 140 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.அதன்படி, திருவம்பட்டு, தேவதானம்பேட்டை, பூண்டி, பி.கரைமேடு, சுந்தரிபாளையம், குமுளம், புதுக்கருவாட்சி, சிந்தாமணி, கயத்துார், பொன்னங்குப்பம், பிரம்மதேசம், சத்தியமங்கலம், எய்யில், மேல்வயலாமூர், தாழங்குணம், கெங்கபுரம், பரனுார், நெடுந்தோண்டி, கட்டளை, தீவனுார், எண்ணாயிரம், ஈச்சங்குப்பம், எளமங்கலம், கொட்டியாம்பூண்டி, பொன்னம்பூண்டி, குறிஞ்சிப்பை, வெள்ளிமேடுபேட்டை, உலகலாம்பூண்டி, ஆனாங்கூர், கிளியனுார் ஆகிய 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் துவக்கப்பட்டது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் வி.மாத்துார், எசாலம், வாக்கூர், மேட்டுவைலாமூர், எதப்பட்டு, ஓங்கூர், சிறுவாடி, அரகண்டநல்லுார், கண்டாச்சிபுரம், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், அரும்பட்டு, மணக்குப்பம், பெரியசெவலை, புதுக்குப்பம், பொம்பூர், பெரும்பாக்கம், காணை, கல்பட்டு, பா.வில்லியனுார் ஆகிய 20 இடங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய நிறுவனம் சார்பில் கொரலுார், நீர்பெருந்தகரம், ஏதாநெமிலி, வடநெற்குணம், கொல்லுார், நல்லாவூர் ஆகிய 6 இடங்களிலும், நெல்கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டது.மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 63 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் கடந்த 12ம் தேதி வரை 15 ஆயிரத்து 561 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய நிறுவனம் சார்பில் 29 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி வரை 27 ஆயிரத்து 936 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம், 43 ஆயிரத்து 497 மெட்ரிக் டன் (40 கிலோ எடையுள்ள ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 742 மூட்டைகள்) நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக 75 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரத்து 140 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை