மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
16-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், வளர்ச்சி தடைபட்ட மாற்றுதிறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் வாயில் பகுதியில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில், உயரம் தடை பட்ட மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனம் உள்ளவர்களாக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்; அவர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய அரசு இலவச வீடு வழங்க வேண்டும்; மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் போராட்டத்தையடுத்து, கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
16-Oct-2025