மேலும் செய்திகள்
பசுந்தாள் உர விதை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
26-Jun-2025
பசுந்தாள் உர விதை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
27-Jun-2025
வானுார் : வானுாரில் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் தக்க பூண்டு பசுந்தாள் உர விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளண் துணை இயக்குநர் (திட்டம்) குமாரி ஆனந்தி தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு தக்க பூண்டு விதைகளை வழங்கி பேசினார்.அப்போது அவர், மாவட்டத்தில் தற்சமயம் சம்பா பருவம் துவங்க உள்ள நிலையில், விவசாயிகள் நெல் நடவு செய்வதற்கு முன்பாக பசுந்தாள் உர பயிரான தக்க பூண்டு சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தக்க பூண்டு விதைகள் தற்சமயம் அனைத்து வட்டாரங்களுக்கும் தேசிய விதை கழகம் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.ஒரு விவசாயிக்கு அதிகப்படியாக 20 கிலோ மட்டுமே விதைகள் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ விதையின் முழு விலை 129.40 ரூபாயாகும். அரசு மானியம் கிலோ ஒன்றுக்கு 62.50 ரூபாய்.இதில் விவசாயிகள் பங்குத்தொகை 66.90 ரூபாயாகும். விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ், வேளாண் அலுவலர் ரேவதி, துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர்கள் மஞ்சு, ரேகா மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி பங்கேற்றனர்.
26-Jun-2025
27-Jun-2025