உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி அமைச்சர் வழக்கில் தீர்ப்பு திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்

மாஜி அமைச்சர் வழக்கில் தீர்ப்பு திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்

திண்டிவனம் : முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவை வரவேற்று, திண்டிவனத்தில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,பதவி பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் பொன்முடி உள்ளிட்டவர்களின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே 17வது தி.மு.க.,கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிர்வாகிகள் தினேஷ்குமார், கொடியம்குமார், ரமேஷ், சுந்தரமூர்த்தி, ஆதிமூலம், மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ