உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி: மேல்களவாய் கிராமத்தில் வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க., பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவர்கள் ஏழுமலை, ராமகிருஷ்ணன், வெங்கடேசன் தலைமை தாங்கினர். மயிலம் சட்டசபை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி வரவேற்றனர். வடக்கு மாவட்ட செயலா ளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சாதனைகளை வீடு, வீடாகச் சென்று சொல்லி ஓட்டு கேட்க வேண்டும், செஞ்சி, மயிலம் திண்டிவனம் தொகுதிகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இன்று 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உள்ளது. தி.மு.க.,வினர் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற முன்னெடுப்புடன் செயல்பட வேண்டும்.பூத் முகவர்கள், டிஜிட்டல் முகவர்கள் விழிப்புடம் இருக்க வேண்டும். பெயர் சேர்த்தல், நீக்குதல் பணியை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்' என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை