உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செயல்படாத நிர்வாகிகளுக்கு செக் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கலக்கம்

செயல்படாத நிர்வாகிகளுக்கு செக் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கலக்கம்

துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, கட்சியை பலப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்று, கட்சியில் செயல்படும் நிர்வாகிகள் பற்றியும், செயல்படாத நிர்வாகிகள் யார் என்பது குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வுக் கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். இந்நிலையில், வரும் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியில் செயல்படாத நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைமை சேகரித்து வருகிறது.இதன் அடிப்படையில் கோஷ்டி பிரச்னையால், நன்றாக செயல்பட்டு வந்த பல நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு, புதிதாக பல நிர்வாகிகள் பதவியை பிடித்துக் கொண்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக தி.மு.க.,வின் ஆரம்ப கால கட்சி நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, பிற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு மாவட்ட அளவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பதவி பெற்றவர்களில் செயல்படாமல் உள்ள நிர்வாகிகளை நீக்கிவிட்டு, ஆரம்ப காலத்திலிருந்து செயல்பட்டு வந்த கட்சி நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்க கட்சி தலைமை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக செயல்படாத நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்வு பட்டியில் விரைவில் வெளியாக உள்ளது.இதனால் விழுப்புரம் மாவட்ட தி.மு.க., வில் செயல்படாத நிர்வாகிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை