உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் தி.மு.க., ஆலோசனை கூட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு

செஞ்சியில் தி.மு.க., ஆலோசனை கூட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு

செஞ்சி :செஞ்சியில் இன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை;செஞ்சியில் இன்று காலை 10 மணிக்கு, திருவண்ணாமலை சாலையில் உள்ள இ.பி.எஸ். திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர் சேகர் தலைமையில், மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி கிளை செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி