உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நடக்கிறது. ரெட்டியார் மில் அருகே ஜெயசக்தி மண்டபத்தில் நடக்கும் கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார். சட்டசபை தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன் முன்னிலை வகிக்கிறார். இதில், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பூத் முகவர்கள், தேர்தல் பணிக்குழு, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !