மேலும் செய்திகள்
தி.மு.க., செயற்குழு கூட்டம்
15-Nov-2025
செஞ்சி: செஞ்சியில் நடந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' தலைப்பில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கட்சியினரிடையே பேசினார். அப்போது, எஸ்.ஐ.ஆர்., பணிகளை செய்வதில் கவனமுடன் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். தற்போது எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த வரைவு வாக்காளர் பட்டியல் வந்தவுடன் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அடுத்த கட்டமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற விகிதத்தில் கூடுதலாக ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணிகளையும் நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் சேகர், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், அமுதா, அருணகிரி, செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், நெடுஞ் செழியன், சீனி ராஜ். பொதுக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், கதிரேசன், ரவி, பேரூராட்சி சேர்மன் மொத்தியார் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
15-Nov-2025