மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
24-Dec-2024
விழுப்புரம்: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தலையொட்டி, விழுப்புரம் நகர தே.மு.தி.க., சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொள்வது குறித்தும், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலை வரை நினைவு அஞ்சலி செல்வது ஆலோசனை செய்யப்பட்டது. அதே போல், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் செல்லவும், அன்னதானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதில், நகர தலைவர் சிவா, பொதுக்குழு உறுப்பினர் ஆதவன் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சீனிவாசன், வர்த்தக அணி துணை செயலாளர் செந்தில்குமார், நகர நிர்வாகிகள் சூரியகண்ணன், ஆனந்த் கண்ணபிரான், கணேசன், சுமதி, வார்டு செயலாளர்கள் சுந்தர பாண்டியன், ஜெகதீஷ், ஸ்டீபன், பிரகாஷ், கோபி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Dec-2024