உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க. பொதுக்கூட்டம்

தி.மு.க. பொதுக்கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் விழுப்புரம் லோக்சபா தொகுதி தி.மு.க., பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், நகராட்சி திடலில் நடந்த கூட்டத்திற்கு, மாநில துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். அமைச்சர் மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் பாரதி சிறப்புரையாற்றினார். கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், லட்சுமணன், மணிக்கண்ணன் பேசினர்.கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர்கள் ஜனகராஜ், ரமணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன்.மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், நகர இளைஞரணி மணிகண்டன், மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா, நகர செயலர்கள் சக்கரை, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ