உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, காணை ஒன்றிய தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.லோக்சபாவில் அம்பேத்கர் குறித்து தவறான கருத்தை கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காணை குப்பம் அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜா வரவேற்றார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகன், ஆர்.பி முருகன், துணைச் சேர்மன் வீரராகவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வை கண்டித்ததுடன், திடீரென பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.,வை கண்டிப்பதாகவும் கோஷம் எழுப்பினர்.

திண்டிவனம்

திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர செயலாளர் கண்ணன், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பழனி, ராஜாராம், மணிமாறன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் உட்பட பலர் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி

பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனாமுகமது, தலைவர் தண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கண்டமங்கலம்

கண்டமங்கலத்தில் அம்பேத்கர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், செல்வமணி, பிரபாகரன் தலைமை தாங்கினர். ஒன்றிய சேர்மன் வாசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் மோகன்தாஸ்,. மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலியபெருமாள் ஒன்றிய துணைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ