தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அசைவ விருந்து
விழுப்புரம்; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணிகள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்தவுடன், நிர்வாகிகளுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. மட்டன் பிரியாணி, முட்டை, வஞ்சரம் மீன் என அசைவ உணவுகள் தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது.இந்த விருந்தில், நிர்வாகிகளோடு துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு, அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டார்.