மறைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி
செஞ்சி ; செஞ்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செஞ்சியில் உள்ள தி.மு.க., இளைஞரணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமை தாங்கி கண்ணன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உதயகுமார், அண்ணாமலை, விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி துரை திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், சீனிவாசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சோழங்குணம் சரவணன், ஒலக்கூர் கோவிந்தராஜ், கெங்கவரம் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.