மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
11-Sep-2025
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை வகித்தார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மகளிர் பிரச்சார அணி செயலாளர் தேன்மொழி, திருக்கோவிலுார் நகர் மன்றத் தலைவர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கற்பகம், திருக்கோவிலுார் தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். முகையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பொன்முடி எம்.எல்.ஏ., மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் தங்கம், விசுவநாதன், மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, வேம்பி ரவி மாவட்ட கவுன்சிலர்கள் ராஜிவ்காந்தி, முகையூர் சேர்மன் தனலட்சுமி உமேஷ்வரன், அரகண்டநல்லுார் பேரூராட்சி தலைவர் அன்பு, கண்டாச்சிபுரம் கிளை நிர்வாகிகள் ரவிக்குமார், ஜீவானந்தம், ஒன்றய கவுன்சிலர் மீனாகுமாரி ஏழுமலை உள்ளிட்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பை பொன்முடி வாசிக்க தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரபு, முகையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லுாயிஸ் நன்றி கூறினர். இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் செய்தனர்.
11-Sep-2025